பாட்னா,செப்.22- பீகார் மாநிலத்தில் முதல் பெண்கள் தபால் அலுவலகத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் அமைக்கப் பட்டுள்ளது. தபால் அலுவலகத்தை துவக்கிவைத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த அலுவல கம் முழுவதும் மகளிர் மட்டுமே செயல்படுவர். தலைமை அதிகாரி முதல் தபால்களை விநியோகம் செய்பவர்கள் வரை மகளிர் மட்டுமே பணியில் ஈடுபடுவர். மாநிலஅரசு பணி தேர்வாணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை இந்த மகளிர் தபால் நிலையம் செய்யும் என்று தெரிவித்தார். இந்தியாவின் முதல் பெண்கள் தபால் நிலையம் புதுதில்லியில் 2013 மார்ச்சில் தொடங்கப்பட்டது.